ADDED : ஜூன் 29, 2025 12:29 AM
மதுரை: ஊமச்சிகுளம் அருகே செட்டிகுளம் பெரியாறு பிரதான கால்வாயின் 5வது கிளை வாய்க்காலில்இருந்த ஆக்கிரமிப்புகளைநீர்வளத்துறையினர் அகற்றினர்.
செயற்பொறியாளர் சிவப்பிரபாகர், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி பொறியாளர்கள் சண்முகசுந்தரம்,ஜெகதீஷ், ஹரிஹரசுதன் முன்னிலையில் வருவாய்த்துறை, போலீசார், மின்ஊழியர்கள் ஒருங்கிணைப்புடன் வீடு, கடை உள்ளிட்ட 40 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.