Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செஞ்சிலுவை சங்க தேர்தல் தள்ளி வைப்பு

செஞ்சிலுவை சங்க தேர்தல் தள்ளி வைப்பு

செஞ்சிலுவை சங்க தேர்தல் தள்ளி வைப்பு

செஞ்சிலுவை சங்க தேர்தல் தள்ளி வைப்பு

ADDED : செப் 07, 2025 03:55 AM


Google News
மதுரை: மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2021ல் நடந்தது. அதில் முறைகேடு நடந்ததாக அறிய வந்ததால் அப்போதைய கலெக்டர் தேர்தலை ரத்து செய்தார். இதையடுத்து மீண்டும் தேர்தல் நடத்தப் படாமல் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவுப்படி உறுப் பினர்களுக்கு தகவல் தெரிவித்து செப்.6க்குள் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

இதையடுத்து நேற்று உறுப்பினர்கள் 1667 பேரில் 150க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் தலைமையில் தேர்தல் துவங்கியது.

சிரஸ்தார் சரவணன், தேர்தல் செயலாளர் ராஜ்குமார், முன்னாள் செய லாளர் கோபால், முன்னாள் நிர்வாகிகள் பலர் பங் கேற்றனர்.

வந்த உறுப்பினர்களில் 2014 முதல் 2018 வரையான காலகட்டத்தில் உள்ளவர்கள் பட்டியலில் இல்லாததால், அடையாள அட்டை, ஆதார் அட்டை அடிப்படையில் ஓட்டளிக் கலாம் எனக் கூறினர். ஆனால் பெரும்பாலோர் தங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. முறையான பட்டியலை தயார் செய்து அதன்பின் நிர்வாக குழுவை தேர்வு செய்யலாம் என தெரி வித்தனர்.

இதையே தீர்மானமாக நிறைவேற்றி கலெக்டரிடம் அனுப்ப வேண்டும் எனவலியுறுத்தினர். இதையடுத்து அதற்கான நட வடிக்கை மேற்கொள் வதாகவும், தேர்தலை தள்ளி வைப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. தேர்தலையொட்டி திரளான போலீசார், வருவாய் அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us