ADDED : மே 19, 2025 04:49 AM
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் 110 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பேரையூர் காமராஜர் தெரு, அரண்மனை வீதி,, எஸ்.மேலப்பட்டி, பி தொட்டியபட்டி வேப்பம்பட்டி ஜம்பலபுரம் உள்ளிட்ட 20 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
பல ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளில் இட நெருக்கடியாக இருப்பதால் மக்கள் வரிசையில் நிற்பதற்குகூட இடம் இல்லை. போதிய வசதி இன்றி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
ரேஷன் கடைக்கு வருவோர் வெயில், மழையில் நிற்க வேண்டிய அவலம் உள்ளது. புதிய கட்டடம் கட்ட வேண்டும் என இப்பகுதியினர் நீண்ட நாட்களாக வலியுறுத்துகின்றனர். அதற்கேற்ற வசதியுடன் ரேஷன் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.