ADDED : பிப் 12, 2024 05:21 AM
மதுரை: மதுரையில் 40 நாட்களான குட்டி நாய் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை யாதவர் கல்லுாரி சண்முகா நகர் பகுதியில் நாய் குட்டி ஒன்று கம்பியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. விலங்குகள் நல ஆர்வலர்கள் முருகேஸ்வரி, புகழேந்தி அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 40 நாட்களே ஆன குட்டியை சிலர் அடித்து கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. முருகேஸ்வரி திருப்பாலை போலீசில் அளித்த புகாரில் விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்பகுதியில் நாய்குட்டிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை சிலர் குறிவைத்து தாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.