ADDED : மார் 22, 2025 04:18 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா கரடிக்கல் கிராமத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் மார்ச் 24 ல் மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது.
இதற்காக மார்ச் 17ல் முன்னோடி மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 24 ல் திருமங்கலம் தாலுகாவின் அனைத்து கிராம மக்களும் தங்கள் குறைகள் குறித்தும், தேவையான நலத்திட்ட உதவிகளை பெறுவது குறித்தும் மனு செய்யலாம் என திருமங்கலம் தாசில்தார் சுரேஷ் கிளமென்ட் பிரெட்ரிக் தெரிவித்தார்.