/உள்ளூர் செய்திகள்/மதுரை/டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரைடங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை

வாகன பேரணியாக மாறியது
பின் 500க்கும் மேற்பட்ட வேன், டிராக்டர், ஆட்டோக்களில் ஒத்தக்கடை, உத்தங்குடி, மாட்டுத்தாவணி, மாவட்ட நீதிமன்றம் வரை வாகன பேரணியாக வந்தனர். மாவட்ட நீதிமன்றம் அருகே வந்ததும் இரு பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவு வாகனங்களை மாநகராட்சி அலுவலக பாதையிலும், மற்றொரு பிரிவினரை காந்தி மியூசியம் ரோடு வழியாகவும் தபால் தந்தி அலுவலகம் செல்ல போலீசார் அனுமதித்தனர். நிறைவாக தந்தி அலுவலகம் அருகே வணிகர்கள், வர்த்தகர்கள், வழக்கறிஞர்களும் ஒன்று திரண்டனர். இதனால் தல்லாகுளம், கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பாதையில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி ரோடே ஸ்தம்பித்தது. வாகனங்கள் செல்ல முடியவில்லை.
சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது: தமிழக அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ. உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்து டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. பிரதமர் மோடி அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.