/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுகாதார அதிகாரி குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம் சுகாதார அதிகாரி குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்
சுகாதார அதிகாரி குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்
சுகாதார அதிகாரி குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்
சுகாதார அதிகாரி குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2025 03:51 AM
மதுரை: மதுரையில் ஆரம்ப சுகாதார நிலைய (பி.எச்.சி.,) டாக்டர்களை தகாத வார்த்தைகளில் பேசிய மாவட்ட சுகாதார அதிகாரி குமரகுருபரனை பொது சுகாதார இயக்கக இணை இயக்குநர் செந்தில் விசாரித்து ஒரு மாதமாகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி முன் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாநிலத் தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர்கள் இளமாறன், விஸ்வநாதபிரபு (பி.எச்.சி.,) பொருளாளர் குமாரதேவன் தலைமையில் கிராமப்புற பி.எச்.சி.,யைச் சேர்ந்த 150 டாக்டர்கள், மதுரை அரசு மருத்துவமனை, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், மேலுார், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 500 டாக்டர்கள் பணி முடிந்த பின் மாலையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
பின் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பி.எச்.சி.,யில் பணிபுரியும் டாக்டர்களை ஒருமையிலும் தகாத வார்த்தைகளிலும் தொடர்ந்து குமரகுருபரன் பேசினார். விசாரணை இன்றி மெமோ கொடுத்து டாக்டர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். அரசாணை படி மெமோ கொடுத்த 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும்.
ஆனால் 4 பேருக்கு 17 பி மெமோ கொடுத்து ஓராண்டாகியும் அதை விசாரித்து அறிக்கை தராததால் அவர்களின் பதவி உயர்வு, பணஉயர்வு பலன்கள் தடைபடுகிறது.
குமரகுருபரன் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான காரணம் தெரிய வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றனர்.