ADDED : ஜன 05, 2024 05:11 AM
மதுரை, : மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் நிதிக்காப்பாளரை கண்டித்து போராசிரியைகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்வழி மாணவிகளுக்கு உதவித் தொகை, உடற்கல்வி துறை சார்பில் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு உரிய செலவினத்தை உடன் விடுவிக்க வேண்டும். பேராசிரியைகளுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் தொடர்பான ஆவணங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 30க்கும் மேற்பட்ட பேராசிரியைகள் பங்கேற்றனர். நிதிக்காப்பாளருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.