/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 6 தங்கப்பதக்கங்களை வென்ற சிறை காவலர்கள் 6 தங்கப்பதக்கங்களை வென்ற சிறை காவலர்கள்
6 தங்கப்பதக்கங்களை வென்ற சிறை காவலர்கள்
6 தங்கப்பதக்கங்களை வென்ற சிறை காவலர்கள்
6 தங்கப்பதக்கங்களை வென்ற சிறை காவலர்கள்
ADDED : செப் 16, 2025 04:29 AM

மதுரை: ஐதராபாத்தில் செப்.,9,10ல் ஏழாவது அகில இந்திய சிறை காவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் தமிழக சிறை காவலர்களில் இருந்து பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு குழுத்தலைவரான மதுரை டி.ஐ.ஜி., முருகேசன் 83 பேரை தேர்வு செய்தார். அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்ற 83 பேர் பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 6 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றனர். 5 சுழற்கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தனர். கடந்தாண்டு நடந்த தேசிய போட்டியிலும் தமிழக சிறை காவலர்கள் 2ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற 53 காவலர்கள் எஸ்.பி. சதீஷ்குமார் தலைமையில் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.