மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் ஜீவகருணை பிரார்த்தனை நடந்தது. உயிர்களிடத்து அன்பு செலுத்தவும், தேச அமைதி வேண்டியும், பக்தி தலங்களில் ஆடு, கோழி உயிர்பலி நிறுத்த வலியுறுத்தியும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
வள்ளலாரின் போதனைகள் அடிப்படையில் உயிர்கொல்லாமை பற்றி மேற்கோள்கள் எடுத்துரைக்கப்பட்டன. ஏற்பாடுகளை சன்மார்க்க சேவகர் ஜோதிராமநாதன் செய்தார்.