/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சூறாவளியால் சாய்ந்தன மின்கம்பங்கள் பள்ளப்பட்டியில் 10 நாளாக 'பவர் கட்' சூறாவளியால் சாய்ந்தன மின்கம்பங்கள் பள்ளப்பட்டியில் 10 நாளாக 'பவர் கட்'
சூறாவளியால் சாய்ந்தன மின்கம்பங்கள் பள்ளப்பட்டியில் 10 நாளாக 'பவர் கட்'
சூறாவளியால் சாய்ந்தன மின்கம்பங்கள் பள்ளப்பட்டியில் 10 நாளாக 'பவர் கட்'
சூறாவளியால் சாய்ந்தன மின்கம்பங்கள் பள்ளப்பட்டியில் 10 நாளாக 'பவர் கட்'
ADDED : ஜூலை 04, 2025 03:23 AM

கொட்டாம்பட்டி:பள்ளப்பட்டியில் சூறாவளிக்கு மின்கம்பங்கள் சாய்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டு பத்து நாட்கள் ஆவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டியில் 10 நாட்களுக்கு முன் சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் முத்தழகன் கிணற்று பகுதியில் பல சிமென்ட் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால், அருகில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்தன. அப்பகுதியில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.
இதனால் 20 க்கும் மேற்பட்ட கிணற்று தண்ணீரை நம்பி நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், வாழை, தென்னை, எள் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகத்துவங்கியுள்ளது.
பாதித்த விவசாயிகள் கூறியதாவது: சொசைட்டியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்த பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளது. மின்கம்பங்களை சரிசெய்வது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் 'மின்கம்பம் இல்லை' என்கின்றனர். பயிர்கள் கருகுவதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி கடன்களை செலுத்த முடியாமல் தவிக்கிறோம். மின்வாரியம் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்து விரைந்து மின்வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என்றனர்.
உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் கூறுகையில், ''உடனே கம்பங்களை மாற்றி மின்வினியோகம் சரிசெய்யப்படும் என்றார்.