ADDED : ஜன 17, 2024 07:09 AM

மதுரை : சுற்றுலாத்துறை சார்பில் மதுரை துவரிமானில் வெளிநாட்டு பயணிகளுக்கான சிறப்பு பொங்கல் விழா நடத்தப்பட்டது.
பயணிகள் தனி பஸ்சில் துவரிமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராமத்தினர் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். மதுரையர் இயக்கத்தினர், கிராமத்தினர் வெளிநாட்டு பயணிகளுக்கு பொங்கல் வைக்கும் முறையை கற்றுத் தந்தனர்.
சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் பரதம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் நடந்தன.
சுற்றுலா பயணிகள் கிராமிய கலைஞர்களுடன் கருவிகளை இசைத்து ஆடினர். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


