/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கைதி தப்பி ஓட்டம் போலீசார் 'சஸ்பெண்ட்' கைதி தப்பி ஓட்டம் போலீசார் 'சஸ்பெண்ட்'
கைதி தப்பி ஓட்டம் போலீசார் 'சஸ்பெண்ட்'
கைதி தப்பி ஓட்டம் போலீசார் 'சஸ்பெண்ட்'
கைதி தப்பி ஓட்டம் போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 05, 2025 06:13 AM

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பகவதிராஜா 34. கடந்த 2021ல் நடந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஜூன் 15 முதல் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்றுமுன்தினம் காலை இவ்வழக்கின் விசாரணைக்காக மதுரை நகர் ஆயுதப்படை போலீசார் சரவணகுமார், பாலமுருகன் ஆகியோர் பகவதிராஜாவை அழைத்துச்சென்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் இரவு 10:00 மணியளவில் மூவரும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். அப்போது போலீசார் அஜாக்கிரதையாக இருந்ததை பயன்படுத்தி பகவதிராஜா 'எஸ்கேப்' ஆனார். போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
போலீசார் சரவணகுமார், பாலமுருகனை 'சஸ்பெண்ட்' செய்து கமிஷனர் லோகநாதன் நேற்றிரவு உத்தரவிட்டார்.