ADDED : ஜூன் 04, 2025 01:34 AM
மதுரை: மதுரையிருந்து நத்தம் சென்ற அரசு பஸ் சத்திரப்பட்டி அருகே லாரியை முந்த முயன்ற போது பிரேக் சரிவர வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது.
இதில் பஸ்சில் பயணித்த நால்வர் லேசான காயம் அடைந்தனர். பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் மின் தடை செய்யப்பட்டது. பின் ஊழியர்கள் சரி செய்தபின் மின் சப்ளை சீரானது.