ADDED : ஜூன் 04, 2025 01:33 AM
டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் பலி
திருமங்கலம் : மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த ராஜசேகரன் 35, தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று திருமங்கலத்தில் இருந்து டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) மதுரைக்கு சென்றார். கப்பலூர் மின்வாரிய அலுவலகம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். லாரி டூவீலர் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மீது கார் மோதி விவசாயி பலி
மதுரை: வாலாந்தூரைச் சேர்ந்த விவசாயி வீரணன் 65. நேற்று மாலை 5:40 மணியளவில் இவர் வாலாந்தூரில் இருந்து குப்பணம்பட்டிக்கு டூவீலரில் சென்றார். ரோட்டை கடக்க முயன்ற போது பின்னால் மதுரையில் இருந்து தேனி சென்ற கார் மோதியதில் அதே இடத்தில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.