ADDED : மார் 27, 2025 04:45 AM
மதுரை: மதுரை நகரில் ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து உணவு, உடை வழங்கி நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அவர்களை காப்பகங்களிலும் உறவினர்களிடமும் ஒப்படைக்கும் பொருட்டு காவல் கரங்கள் என்ற திட்டத்தை போலீஸ் கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார்.
40 ஆதரவற்ற முதியோர் காப்பகங்கள் துணையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு முன்னோட்டமாக துவக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் இதுவரை 38 பேர் மீட்கப்பட்டு 24 பேர் காப்பகங்களிலும் 11 பேர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3 முதியோர்களின் உடல்கள் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் துணைகமிஷனர் இனிகோ திவ்யன், அனிதா மற்றும் காப்பக நிர்வாகிகள் பங்கேற்றனர்.