/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பி.எப்., வட்டி: மாநகராட்சிஆசிரியர்கள் எதிர்பார்ப்பு பி.எப்., வட்டி: மாநகராட்சிஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பி.எப்., வட்டி: மாநகராட்சிஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பி.எப்., வட்டி: மாநகராட்சிஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பி.எப்., வட்டி: மாநகராட்சிஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 23, 2025 04:31 AM
மதுரை: 'மதுரை மாநகராட்சி சார்பில் ஆசிரியர், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப்., வட்டித் தொகையை விரைவில் வழங்க வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டணியின் மாவட்டச் செயலாளர் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், அலுவலர்களுக்கு 1990 முதல் 2019 வரை வழங்க வேண்டிய பி.எப்., தொகை, வட்டியுடன் ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 என கணக்கிடப்பட்டுள்ளது. விதிப்படி இப்பணத்தை 2019 மார்ச்சுக்குள் மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்தி ஆசிரியர், அலுவலர்கள் கணக்கில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், மதுரை மாநகராட்சி தாமதமாக வழங்கியது. இதனால் சம்பந்தப்பட்ட தொகைக்கு வட்டியாக (30.9.2025 வரை) ரூ. 8.12 கோடியை மாநகராட்சி வழங்க வேண்டும் என உள்ளாட்சி தணிக்கைத் துறை சான்றளித்துள்ளது. இதையாவது தாமதிக்காமல் விரைந்து வழங்க வேண்டும் என்றார்.