ADDED : ஜூன் 02, 2025 01:03 AM
மதுரை: மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தார். முதல்நாள் பெருங்குடியில் துவங்கி அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம், அழகரடி வரை நடந்த ரோடு ஷோவில் பங்கேற்றார். பின்னர் மதுரையின் முதல்மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் திரளான பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரண்டாம் நாளான நேற்றும் அவர் புதுார் துவங்கி, உத்தங்குடி வரை ரோடு ஷோ நடத்தி, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராம், மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், திருப்பாலை பகுதி செயலாளர் கே.பி., சசிகுமார், வடக்கு மாவட்டம் சமய நல்லுார் பாலமுருகன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, வடக்கு மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.