ADDED : ஜன 15, 2024 11:51 PM
மேலுார்: பழையசுக்காம்பட்டியில் சுவாமி விவேகானந்தர்பிறந்த நாளை முன்னிட்டு நேரு யுவகேந்திரா, வின்ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம்சார்பில் பங்கேற்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.
மேலுார் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் பஞ்சவர்ணம் வரவேற்றார். நகராட்சி தலைவர் முகமதுயாசின், புலவர் காளிராசா, சமூக ஆர்வலர் நவநீதன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கி மேலாளர் மலைச்சாமி நன்றி கூறினார்.


