/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் நவீன வசதியுடன் பன்னடுக்கு 'கார் பார்க்கிங்' மதுரையில் நவீன வசதியுடன் பன்னடுக்கு 'கார் பார்க்கிங்'
மதுரையில் நவீன வசதியுடன் பன்னடுக்கு 'கார் பார்க்கிங்'
மதுரையில் நவீன வசதியுடன் பன்னடுக்கு 'கார் பார்க்கிங்'
மதுரையில் நவீன வசதியுடன் பன்னடுக்கு 'கார் பார்க்கிங்'
ADDED : மே 24, 2025 03:38 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கோட்டத்திலேயே முதன் முறையாக நவீன வசதிகளுடன் பன்னடுக்கு கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இங்கு ரூ.347.47 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதன் ஒருபகுதியாக, மேற்கு நுழைவு வாயிலின் தெற்குப் பகுதியில் ரூ.6.92 கோடி செலவில் 2,413 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு கார் பார்க்கிங் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் 60 கார்களை நிறுத்தலாம். கட்டணம் 2 மணி நேரத்திற்கு ரூ.30; ஆறு மணி நேரத்திற்கு ரூ. 50; அரை நாளுக்கு ரூ. 60; ஒரு நாளுக்கு ரூ. 100. இதற்கான டெண்டர் தெற்கு ரயில்வே சார்பில் விடப்பட்டுள்ளது.
கிழக்கு நுழைவு வாயிலில் பார்சல் அலுவலகம் அருகே 9,173.45 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்றடுக்கு பார்க்கிங் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 166 கார்களை நிறுத்த முடியும். கார்கள் உள்ளே சென்று வெளியேற 3 நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள், லிப்ட் வசதி, கழிப்பறைகள், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி, மின்னணு வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி, தீத்தடுப்பு கருவிகள் உள்பட நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
மறுசீரமைப்புப் பணியில் புதிதாக கட்டப்பட்ட பல அடுக்கு டூவீலர் பார்க்கிங் கிழக்கு நுழைவு வாயில் தெற்குப் பகுதியில் செயல்படுகிறது. இங்கு டூவீலர்களை 2 மணி நேரம் நிறுத்த ரூ.10, ஆறு மணி நேரத்திற்கு ரூ. 20, அரை நாளுக்கு ரூ. 30, ஒரு நாளுக்கு ரூ. 40, மாதாந்திர கட்டணம் ரூ.750 வசூலிக்கப்படுகிறது.