ADDED : செப் 04, 2025 04:59 AM

சோழவந்தான்: சோழவந்தான் - வாடிப்பட்டி ரோட்டில் பசும்பொன் நகர் அருகே ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
சோழவந்தானிலிருந்து ஏராளமான வாகனங்கள் இவ்வழியை பயன்படுத்தி நான்கு வழிச்சாலையை அடைகின்றன. இதனால் வாகனங்கள் பள்ளங்களில் தடதடத்து செல்கின்றன. இதன் அருகே மதுக்கடை உள்ளதால் இரவில் வாகனம் ஓட்டும் போதை நபர்கள் பள்ளங்களில் விழுந்து காயம் அடைகின்றனர். வளைவில் இப்பள்ளங்கள் அமைந்துள்ளதால் அடிக்கடி வாகன விபத்தும் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.