/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அ.தி.மு.க.,வில் இளைஞர்களை சேர்த்து அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க திட்டம் பழனிசாமியின் பலே ஐடியா அ.தி.மு.க.,வில் இளைஞர்களை சேர்த்து அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க திட்டம் பழனிசாமியின் பலே ஐடியா
அ.தி.மு.க.,வில் இளைஞர்களை சேர்த்து அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க திட்டம் பழனிசாமியின் பலே ஐடியா
அ.தி.மு.க.,வில் இளைஞர்களை சேர்த்து அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க திட்டம் பழனிசாமியின் பலே ஐடியா
அ.தி.மு.க.,வில் இளைஞர்களை சேர்த்து அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க திட்டம் பழனிசாமியின் பலே ஐடியா
ADDED : ஜூன் 26, 2025 02:00 AM
மதுரை: 'அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் 45 வயதிற்குட்பட்டவர்கள், இளைஞர்கள் இருந்தால்தான் சிறப்பாக தேர்தல் பணியாற்றி ஆட்சி அமைக்க முடியும். இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் வேலையை இப்போதே துவங்குங்கள்' என மாவட்ட செயலாளர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் இரட்டை தலைமையாக செயல்பட்ட அ.தி.மு.க., 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 19.4 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு 20.4 சதவீத ஓட்டுகளை பெற்றது.
2019ல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., 2024ல் 2.61 லட்சம் ஓட்டுகள்தான் பெற்றன. ஒவ்வொரு தொகுதியிலும் 1.5 லட்சம் ஓட்டுகளை இழந்தன. இதற்கு பன்னீர்செல்வம், தினகரன் பிரிந்ததும், வலுவான கூட்டணி இல்லாததும் ஒரு காரணம்.
ஓட்டு சதவீதத்தை அதிகரித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், அதற்கு அடிப்படையான பூத்களை வலுப்படுத்த பழனிசாமி திட்டமிட்டு பொறுப்பாளர்களை நியமித்து, அவ்வப்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, ஓட்டுகளை அதிகரிக்க செய்வதற்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார். நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து பேசிய பழனிசாமி, 'பூத்களை வலுப்படுத்தினால் மட்டுமே நமது ஓட்டு வங்கியை பாதுகாக்க முடியும். பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை கொண்ட கூட்டணி தற்போது அமைந்துள்ளது. இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. இதனால் அ.தி.மு.க., தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.
பூத்களில் பணியாற்ற இளைஞர்கள்தான் சரியாக இருக்கும். 45 வயதிற்குட்பட்டவர்கள், இளைஞர்களை கட்சியில் சேர்த்து களப்பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களை வைத்துதான் அடுத்தடுத்து தேர்தல்களை நாம் சந்தித்து சிறப்பாக ஆட்சி அமைக்க முடியும்' என்றார்.