/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அப்போலோ மருத்துவமனையில் வாய் புற்றுநோய் பரிசோதனை அப்போலோ மருத்துவமனையில் வாய் புற்றுநோய் பரிசோதனை
அப்போலோ மருத்துவமனையில் வாய் புற்றுநோய் பரிசோதனை
அப்போலோ மருத்துவமனையில் வாய் புற்றுநோய் பரிசோதனை
அப்போலோ மருத்துவமனையில் வாய் புற்றுநோய் பரிசோதனை
ADDED : ஜூன் 04, 2025 01:28 AM
மதுரை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, சலுகை கட்டணத்தில் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டத்தை மதுரை அப்போலோ மருத்துவமனை தொடங்கியது.
தலைமை செயல்பாட்டு அதிகாரி நிகில் திவாரி, புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 77 ஆயிரம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 52 ஆயிரம் பேர் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புகையிலையால் வாய்புற்றுநோய் உட்பட 15 வகையான புற்றுநோயும், இதயபாதிப்பு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன.
தென்மாவட்டங்களில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு என்றாலும், சிலருக்கு கூர்மையான பற்கள், செயற்கை பற்கள் சரியாக பொருத்தாது காரணமாக நாக்கு, தாடையில் காயம் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் ஏற்படும் அபாயமுள்ளது.
பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர்.
வாய்புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கான சிறப்பு திட்டத்தை அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோய் மையம் தொடங்கியுள்ளது. இதில் ரூ.499 செலுத்தி பரிசோதிக்கலாம். சிகிச்சைக்கு ஆரம்ப கட்டத்தில் வரும் பட்சத்தில் விரைவில் குணமாவது மட்டுமின்றி, குறைவான செலவே ஆகும் என்றனர்.