Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/'அட்மா' திட்டத்தில் தலைவர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு

'அட்மா' திட்டத்தில் தலைவர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு

'அட்மா' திட்டத்தில் தலைவர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு

'அட்மா' திட்டத்தில் தலைவர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு

ADDED : ஜன 10, 2024 06:25 AM


Google News
உசிலம்பட்டி : உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நிலம் இல்லாத அரசியல் கட்சியினருக்கு வேளாண் துறை 'அட்மா' திட்டத்தில் தலைவர் பதவி வழங்கியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இக்கூட்டம் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் சுரேஷ் பிரடரிக் கிளமண்ட், துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் பேசியதாவது:

58 கிராம கால்வாயில் வினாடிக்கு 300 கன அடிநீர் திறப்பதற்கு பதிலாக 150 கன அடி தண்ணீர் திறந்துள்ளதால் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் நீர் வளத்துறை அதிகாரிகள் திட்டமிட வேண்டும். வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நல்லுத்தேவன்பட்டி பகுதியில் மலையடிவாரம் சடையாள் பகுதியில் இருந்து வரும் ஓடை துார்ந்து போனதால் அப்பகுதியில் உள்ள நான்கு குளங்களுக்கு தண்ணீர் வராமல் உள்ளது.

இதனை அளவீடு செய்து ஓடையை துார் வாரவேண்டும். வேளாண் துறையில் 'அட்மா' திட்டத்தில் விவசாய நிலம் இல்லாத கட்சி நிர்வாகிகளுக்கு தலைவர் பதவி வழங்கியுள்ளனர்.

இதனால் வேளாண் திட்டங்கள் குறித்து உண்மையான விவசாயிகளுக்கு தகவல் தெரிவதில்லை என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us