/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஓபன் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிஓபன் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி
ஓபன் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி
ஓபன் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி
ஓபன் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : ஜன 11, 2024 03:57 AM

மதுரை : கோவையில் மாநில ஓபன் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதில் மதுரை மாணவ, மாணவியர் 13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்றனர்.பாயின்ட் பைட்டிங் பிரிவில்ரியா, ஜாரா, நிகில், டியான், தஸ்வின், தவராம், தீனதயாளன் தங்கப்பதக்கம் வென்றனர்.லைட் கான்டாக்ட் பிரிவில்ரக்சன், தேவபாலன்தங்க பதக்கம்,தவராம், தீனதயாளன் வெள்ளி பதக்கம் வென்றனர்.
கிக் லைட் பிரிவில் மோஷிகா நாச்சியார் தங்கம் வென்றார்.கிரியேட்டிவ் பார்ம் பிரிவில்நிகில், ரக்சன் தங்கப்பதக்கமும்,தஸ்வின் வெள்ளி பதக்கமும், ரியா, ஜாரா, டியான், தேவபாலன், மோஷிகா நாச்சியார் வெண்கல பதக்கமும் வென்றனர். புல் கான்டாக்ட் பிரிவில் தரணிதரன் தங்கப்பதக்கமும், விஷ்ணு பிரசாந்த் வெள்ளி பதக்கமும் வென்றனர்.வெற்றி பெற்றவர்களை மதுரை அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், துணை செயலாளர் கார்த்திக் பாராட்டினர்.