ADDED : ஜன 13, 2024 04:06 AM

நாய்கள் தொல்லை
மதுரை கே.கே. நகர் நியூ எல்.ஐ.சி காலனியில் தெருநாய்கள் தொல்லையால் வெளியில் செல்ல முடியவில்லை. குழந்தைகளைத் துரத்துவதால் அச்சமாக உள்ளது. நடவடிக்கை தேவை.
- --பாலசந்தர், கே.கே. நகர்.
தெருவிளக்குகள்
எரியவில்லை
மதுரை மாநகராட்சி 12 வது வார்டு லுார்து நகர் 9வது தெருவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் சமூக விரோதிகள் மது அருந்துவதால் பொதுமக்கள் செல்ல முடியவில்லை. டியூசன் செல்லும் மாணவர்களுக்கு தொல்லையாக உள்ளது. -
-குருநாதன், லுார்துநகர்.
ஆபத்தான மின்கம்பம்
மதுரை கிழக்கு ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி, செட்டிக்குளம் கிராமத்தில் ரோட்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து விபத்து அபாயம் உள்ளது.உடனே புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
-ராஜேந்திரன், செட்டிக்குளம்.
புதிய ரோடு சேதம்
சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மதுரை புதுராமநாதபுரம் ரோடு, முறையான திட்டம் இல்லாததால் சமதளமின்றி மேடு பள்ளமாக உள்ளது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடக்கிறது.
--குமரேஸ் பாபு, ஐராவதநல்லுார்.
ஆக்கிரமிப்புகளால் தொல்லை
மதுரை கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டும் -
-ஹரி, மகால் 3வது தெரு, மதுரை.
மோசமான ரோடுகள்
மதுரை புதுார் மாதாசர்ச் தெரு, சிங்காரவேலர் தெரு, ஜவஹர்புரம், டி.ஆர்.ஓ. காலனி பகுதிகளில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிகுள்ளாகின்றனர். உடனே சரிசெய்ய வேண்டும். -
-முத்துராமன், டி.ஆர். ஓ. காலனி.
எரியாத விளக்குகள்
மதுரை மூன்று மாவடியில் இருந்து ஐயர் பங்களா செல்லும் ரோட்டில் உள்ள விளக்குகள் எரியாமல் இருட்டுமயமாகஉள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதியில் வழிப்பறி திருட்டு அபாயம் உள்ளது.
-ராஜன் பாபு, தபால் தந்தி நகர் விரிவாக்கம்.
குப்பையால் சுகாதார சீர்கேடு
மதுரை கோமதிபுரம் அம்பிகாநகர், தாழை வீதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் பலநாட்களாக குப்பை அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துசாமி, தாழைவீதி.
* மதுரை அரசு மருத்துவமனை சுரங்கப்பாதை அருகே குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை அருகிலேயே நோய் தொற்றும் அபாயம் உள்ளது. -
-ரமேஷ், ஆழ்வார்புரம்.
* மதுரை சுப்பிரமணியபுரத்தில் நடுரோட்டில் குப்பை கொட்டுவதால் நடமாடமுடியவில்லை. ஆங்கில புத்தாண்டு முதல் இப்பகுதியில் குப்பை அகற்றபட வில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
-யுவராஜ், சுப்பிரமணியபுரம்.
* மதுரை உச்சபரம்புமேடு பனங்காடி ரோட்டில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.இதில் முறையாக குப்பையை அள்ளாததால் அவை ரோட்டில் சிதறி கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
- -செல்வம், பனங்காடி.
* மதுரை மாநகராட்சி 22வது வார்டு அன்னை தெரசா மெயின் வீதியில் கொட்டிய குப்பையை பல நாட்களாக அகற்றவில்லை. 15 அடி ரோட்டில் 13 அடி குப்பையாகவே கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தானம், அன்னை தெரசா வீதி.
* திருநகர் 8 வது பஸ் ஸ்டாப் அருகேயுள்ள காந்திஜி முதல் குறுக்குத் தெருவில் குப்பை நிரம்பி அள்ளப்படாமல் உள்ளது.
--முருகன், திருநகர்.