ADDED : ஜூன் 18, 2025 04:16 AM

நிரம்பி வழியும் தொட்டிகள்
மதுரை கே.கே.நகர் லேக் வியூ ரோட்டில் 3 குப்பைத் தொட்டிகள் உள்ளன. அப்பகுதி உணவகங்களில் சேரும் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி இரவு நேரங்களில் வீசுகின்றனர். சுகாதார ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவஞானம், கே.கே.நகர்.
குப்பையை எரிப்பதா
மதுரை பாத்திமா கல்லுாரி அருகே உள்ள பாலத்தின் கீழ் குப்பையை எரிப்பதால் புகை கிளம்புகிறது. அதனை சுவாசிக்கும் மக்களின் உடல்நலன் கேள்விக்குறியதாகிறது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்கண்ணன், செல்லுார்.
பல்லாங்குழி ரோடுகள்
மதுரை அனுப்பானடியில், கீழ அனுப்பானடி பஸ் ஸ்டாண்டில் இருந்து வ.உ.சி., மன்றம் வரை உள்ள ரோடுகள் பல்லாங்குழி போல் மேடு பள்ளமாக காட்சியளிக்கின்றன. மழைக்காலம் வரும்முன் பேவர்பிளாக் கற்கள் பதிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்ந வடிவேல், அனுப்பானடி.
குடிநீருக்காக அலைச்சல்
கீழ் மதுரை, சின்னக்கண்மாய் பகுதியில் ஜி.எம்.கிருஷ்ணன் சந்தில் புதிய குடிநீர் குழாய்களை பதித்தும் இன்னும் குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் பிற பகுதிகளுக்கு தேடி அலைய வேண்டியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணன், கீழ்மதுரை.
மருத்துவக் கழிவை கொட்டுவதா
மதுரை எல்லீஸ் நகர் குடியிருப்பு பகுதியின் பின்புறம் மருத்துவக் கழிவுகளை கொட்டுகின்றனர். குடியிருப்புப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை அகற்ற நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், எல்லீஸ் நகர்.
சுற்றுச்சூழல் சீர்கேடு
திருமங்கலத்தில் செயல்படும் தனியார் மெட்டல் கம்பெனியால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் சீர்கேடு அடைந்து விட்டது. விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காதர்பாட்ஷா, கூத்தியார்குண்டு.