ADDED : செப் 09, 2025 04:23 AM
திருமங்கலம்: கப்பலூரை சேர்ந்தவர் குமரேசன் 50. இவர் டூவீலரில் நேற்று டோல்கேட் அருகே தர்மத்துப்பட்டி பிரிவில் இருந்து நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது சிவகாசியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பாண்டியராஜன் 39, என்பவர் ஓட்டிச் சென்ற கார் மோதியது. மோதிய வேகத்தில் கார் சென்டர் மீடியனை கடந்து எதிர் திசையில் டோல்கேட்டில் இருந்து பேரையூர் நோக்கி சென்ற சரக்கு வேன் மீது மோதியதில் கார் மற்றும் வேன் கவிழ்ந்தது.
காரில் வந்த பாண்டியராஜன், டூவீலரை ஓட்டி வந்த குமரேசன், சரக்கு வேனில் வந்த மானாமதுரையைச் சேர்ந்த நாகேந்திரன் மங்கள்ரேவு ராஜாங்கம் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை நெடுஞ்சாலை விபத்து மீட்பு குழுவினர் மற்றும் திருமங்கலம் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் குமரேசன் பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.