Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரே நாடு ஒரே தேர்தல் மாணவர்கள் ஆர்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மாணவர்கள் ஆர்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மாணவர்கள் ஆர்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மாணவர்கள் ஆர்வம்

ADDED : மார் 22, 2025 04:23 AM


Google News
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாவட்ட அளவிலான 'விக்சித் பாரத் யூத் பார்லிமென்ட் - 2025'போட்டியின் துவக்க விழாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் மதுரை, திண்டுக்கல், தேனி கல்லுாரிகளின் மாணவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குனரகம், மதுரை காமராஜ் பல்கலை சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., குழுத் தலைவர் செல்வன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா பேசியதாவது:

அரசியலில் இளைஞர்கள் பங்கு இருக்க வேண்டும். தேசிய பிரச்னை குறித்து பேச வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் படி 2019ல் தொடங்கப்பட்டது. பார்லிமென்டிற்கு செல்லும் வாய்ப்பு இதன் மூலம் இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. உடல்மொழி, பேச்சாற்றால், மொழிவளம் திறன் ஆராய்ந்து 150 பேரில் இருந்து 10 பேர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதன் நோக்கம் இளைஞர்களின் 2047க்கான தொலை நோக்கு பார்வையை வடிவமைப்பதாகும் என்றார்.

நடுவர்களாக எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ், செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, பட்டிமன்ற பேச்சாளர் ஜெயம்கொண்டான் பங்கேற்றனர். பேராசிரியை டாபினி நன்றி கூறினார். பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாண்டி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நேற்றைய நாளில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தலைப்பில் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இரண்டாம் நாளான இன்றும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us