தினமலர் செய்தியால் அதிகாரிகள் ஆய்வு
தினமலர் செய்தியால் அதிகாரிகள் ஆய்வு
தினமலர் செய்தியால் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 18, 2025 03:01 AM
மேலுார்: கொட்டகுடி ஒன்றியம் பெருமாள் குளத்தை துார்வாரப்படாமல் மணல் நிரம்பி மானாவாரி நிலம் போல் மாறிவிட்டது.
இதனால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வெளியேறி குளம் வறண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சுந்தரசாமி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குளத்தை துார்வார ஏற்பாடு செய்வதாக கூறினர்.


