Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தென்காசி கோயில் கும்பாபிேஷகம்தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

தென்காசி கோயில் கும்பாபிேஷகம்தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

தென்காசி கோயில் கும்பாபிேஷகம்தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

தென்காசி கோயில் கும்பாபிேஷகம்தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

ADDED : மார் 19, 2025 04:17 AM


Google News
மதுரை : தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபி ேஷகத்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தென்காசி முத்துராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபி ேஷகம் ஏப்.,7ல் நடக்க உள்ளது. கோயில் வளாக கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. புனரமைப்பு பணி முழுமையடையவில்லை. மெதுவாக பணிகள் நடக்கின்றன. கோயில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோயில் வளாக தரைமட்டத்தின் உயரம் தாழ்ந்துள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கோயிலைச் சுற்றிலும் மற்றும் கோபுரத்திலும் போதிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். சுவாமி ஊர்வலத்திற்கு பயன்படும் தேர் சீரமைக்கப்பட வேண்டும்.

கோயிலின் நுழைவு வாயில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மழை நீர் கோயிலுக்குள் புக வாய்ப்புள்ளது. ராஜகோபுர பகுதியில் மழை நீர் கசிவதை சீரமைக்கவில்லை. அதன் மீது வண்ணம் பூசப்படுகிறது. புனரமைப்பு பணி மாநில நிபுணர் குழு பரிந்துரைப்படி நடக்கவில்லை. அவசரகதியில் கும்பாபிேஷகம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அறநிலையத்துறை கமிஷனர், தென்காசி கலெக்டர், கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us