ADDED : செப் 15, 2025 03:49 AM
மதுரை : மதுரை கருப்பாயூரணி எம்.பி., மஹாலில் நாளை (செப்.16) காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது.
இதற்காக இவ்வூராட்சியின் அம்மாபட்டி, தாதன்குளம், வீரபாண்டி, பாண்டியன்கோட்டை, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, ஏ.டி.காலனி பகுதி வீடுகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட குடும்பத்தினர் நேரடியாக முகாம் நடைபெறும் இடத்தில் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என, ஊராட்சி செயலர் பால்பாண்டி தெரிவித்துள்ளார்.