ADDED : ஜூன் 15, 2025 06:54 AM
சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.பள்ளிக்குத் தேவையான மின்விசிறிகள், பர்னிச்சர்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் அழகுசுந்தரம் தலைமை வகித்தார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் சகுபர்சாதிக் முன்னிலை வகித்தார்.இதில் ஆசிரியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.