/உள்ளூர் செய்திகள்/மதுரை/குட்லாடம்பட்டி அருவி வீணாக காத்திருப்பது 'நாட் குட்' ; இந்த பட்ஜெட்டிலாவது சீரமைக்க நிதி கிடைக்குமாகுட்லாடம்பட்டி அருவி வீணாக காத்திருப்பது 'நாட் குட்' ; இந்த பட்ஜெட்டிலாவது சீரமைக்க நிதி கிடைக்குமா
குட்லாடம்பட்டி அருவி வீணாக காத்திருப்பது 'நாட் குட்' ; இந்த பட்ஜெட்டிலாவது சீரமைக்க நிதி கிடைக்குமா
குட்லாடம்பட்டி அருவி வீணாக காத்திருப்பது 'நாட் குட்' ; இந்த பட்ஜெட்டிலாவது சீரமைக்க நிதி கிடைக்குமா
குட்லாடம்பட்டி அருவி வீணாக காத்திருப்பது 'நாட் குட்' ; இந்த பட்ஜெட்டிலாவது சீரமைக்க நிதி கிடைக்குமா
ADDED : ஜன 05, 2024 04:48 AM

மதுரை : ஐந்தாண்டுகளுக்கு முன் கஜா புயலில் சேதமடைந்த மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள குட்லாடம்பட்டி அருவியை தற்போது வரை சீரமைக்காத நிலையில் சுற்றுலாத்துறை மூலம் ரூ.1.5 கோடிக்கு பட்ஜெட் அனுப்பப்பட்டுள்ளது.
ஆண்டில் மார்ச் முதல் ஜூன் தவிர மீதமுள்ள மாதங்களில் குட்லாடம்பட்டி அருவியில் தண்ணீர் கொட்டி ஆர்ப்பரிக்கும். 'மதுரையின் குற்றாலம்' என்றழைக்கப்படும் இந்த அருவி பகுதியில் 2018ல் கஜா புயல் தாக்கியது. இதில் குளியலறை பகுதி, அருவிக்கு நடந்து செல்லும் பாதை, நின்று குளிக்கும் படிக்கட்டுகளில் பாறைகள் உருண்டு சேதமடைந்தது. அருகிலேயே மாற்றுப்பாதையாக அனுமதிக்கப்பட்ட போது சகதியான ரோட்டில் செல்ல முடியாததால் ஐந்தாண்டுகளாக அருவியில் குளிப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
வனத்துறை கட்டுப்பாட்டில் அருவி உள்ளதால் வனத்துறை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. சுற்றுலாத்துறை மூலம் ஏற்கனவே இரண்டு முறை சீரமைக்கப்பட்ட நிலையில் 3வது முறையாக ரூ.1.5 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டது. வனத்துறையின் இத்திட்டத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கு அனுமதி கிடைத்தால் தண்ணீர் வராத 4 மாதங்களிலேயே சீரமைத்து அதன்பின் பயணிகளை அனுமதிக்கலாம்.