/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கணவரோடு டூவீலரில் வந்த புது மணப்பெண் கடத்தல் கணவரோடு டூவீலரில் வந்த புது மணப்பெண் கடத்தல்
கணவரோடு டூவீலரில் வந்த புது மணப்பெண் கடத்தல்
கணவரோடு டூவீலரில் வந்த புது மணப்பெண் கடத்தல்
கணவரோடு டூவீலரில் வந்த புது மணப்பெண் கடத்தல்
ADDED : ஜூன் 18, 2025 04:25 AM
திருமங்கலம்: திருமங்கலம் சுவாமிமல்லம்பட்டி விஜயபிரகாஷ் 29. சென்னையில் சிவில் இன்ஜினியராக உள்ளார். இவருக்கும் கரிசல்காளான்பட்டி சுபலட்சுமிக்கும் 22, கடந்த மே 28ல் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் விஜயபிரகாஷ் விடத்தகுளத்தில் உள்ள தங்கை வீட்டில் இருந்து மனைவியுடன் இரவு 9:00 மணிக்கு டூவீலரில் சுங்குராம்பட்டி அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிய 30 வயதுள்ள மூன்று பேர் தடுத்து விஜயபிரகாஷை தாக்கி விட்டு சுபலட்சுமியை காரில் கடத்தினர். ஏ.எஸ்.பி., அன்சுல்நாகர், இன்ஸ்பெக்டர் சுப்பையா விசாரிக்கின்றனர்.