ADDED : செப் 15, 2025 04:44 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தே.மு.தி.க., மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி சார்பில் 21ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
நகர செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். அவைத் தலைவர் நல் கர்ணன், துணைச் செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி கட்சிக் கொடி ஏற்றினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னாள் நகரச் செயலாளர் மாரியப்பன், துணைச் செயலாளர் அரிமலை வரவேற்றனர். மாணவரணி துணைச் செயலாளர்கள் சத்யா, லிங்கேஸ்வரன், கிருஷ்ணன், சூரிய பிரகாஷ், தொண்டரணி ராஜ்குமார் பங்கேற்றனர். நிர்வாகி சங்குபிள்ளை நன்றி கூறினார்.