Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நவராத்திரி விழா துவக்கம்

நவராத்திரி விழா துவக்கம்

நவராத்திரி விழா துவக்கம்

நவராத்திரி விழா துவக்கம்

ADDED : செப் 21, 2025 04:50 AM


Google News
மதுரை: மதுரையில் உள்ள காஞ்சி, சிருங்கேரி மடங்களில் நவராத்திரி உற்ஸவம் நாளை துவங்குகிறது.

பைபாஸ் ரோட்டில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழாவின் துவக்கமாக இன்று காலை 9:00 மணிக்கு சாராதாம்பாளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு சந்திரசேகர பாரதீ சுவாமிகள் ஆராதனை நடக்கிறது. நாளை முதல் அக்.2 வரை தினமும் காலை, மாலை லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை, ஸப்தசதி பாராயணம், சுவாசினி பூஜைகள் நடக்கின்றன. செப்.26 முதல் 30 வரை கன்யாபூஜையும், செப்.30 காலை 8:00 மணி முதல் சதசண்டி மகா யாகம், தம்பதி பூஜை, கன்யா பூஜையும், அக்.2 விஜய தசமியன்று லலிதா ேஹாமமும் நடக்கின்றன.

சோழவந்தான் முள்ளிப்பள்ளம் காஞ்சி சங்கர மடத்தில் நாளை முதல் அக்.,2 வரை தினமும் காலை 9:00 மணிக்கு கோபூஜையும் மாலை 6:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, உள்ளிட்டவை நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us