Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உடல் அடக்கத்திற்கு இடமின்றி மதுரையில் முஸ்லிம்கள் அவதி

உடல் அடக்கத்திற்கு இடமின்றி மதுரையில் முஸ்லிம்கள் அவதி

உடல் அடக்கத்திற்கு இடமின்றி மதுரையில் முஸ்லிம்கள் அவதி

உடல் அடக்கத்திற்கு இடமின்றி மதுரையில் முஸ்லிம்கள் அவதி

ADDED : மார் 18, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரை, ஆனையூர் பகுதி சிலையநேரியில் மஸ்ஜிதே இப்ராஹிம் ஜூம்மா தொழுகை மசூதி உள்ளது. இதைச் சுற்றிஉள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆறு மசூதிகள் உள்ளன. இதன் உறுப்பினர்களாக, 2,500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால், 10 கி.மீ., துாரத்தில் உள்ள மகபூப்பாளையம் அடக்க ஸ்தலத்தில் உடலை புதைக்கின்றனர். இங்குள்ள மண்ணில் மக்கும் திறன் குறைந்ததால், மூன்று மாதத்தில் மக்க வேண்டிய உடல், பல மாதங்கள் எடுத்துக்கொள்கிறது.

இதனால் அந்த இடத்தில் வேறு ஒரு உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உடலை அடக்கம் செய்ய மாற்று இடம் தேடி சில ஆண்டுகளாக மஸ்ஜிதே இப்ராஹிம் ஜூம்மா தொழுகை மசூதி நிர்வாகிகள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனையூர் மசூதி தலைவர் பாபுஜி கூறியதாவது:

அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை மாற்று இடம் கேட்டு மனு கொடுத்து வருகிறோம். அரசு தரப்பில் சில இடங்கள் காண்பிக்கப்பட்டன.

நாங்களும் சம்மதம் தெரிவித்தோம். அப்பகுதியில் வசிப்பவர்கள் குடியிருப்புப் பகுதி, நீர்நிலைப் பகுதி என எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று வரை இடம் கிடைக்காமல் உடலை அடக்கம் செய்ய சிரமப்படுகிறோம்.

பனங்காடியில் போலீஸ் அவுட்போஸ்ட் அருகில் பயன்படாத மயானம் உள்ளது. அதையொட்டி புறம்போக்கு நிலம் உள்ளது.

இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. இந்த இடத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us