/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரைக்கு பெருமை அமைச்சர் மூர்த்தி பாராட்டு மதுரைக்கு பெருமை அமைச்சர் மூர்த்தி பாராட்டு
மதுரைக்கு பெருமை அமைச்சர் மூர்த்தி பாராட்டு
மதுரைக்கு பெருமை அமைச்சர் மூர்த்தி பாராட்டு
மதுரைக்கு பெருமை அமைச்சர் மூர்த்தி பாராட்டு
ADDED : ஜூன் 17, 2025 05:04 AM
மதுரை : நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாணவிகள் சாதித்துள்ளதன் மூலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கன்னிகா, ஜெக ஸ்ரீமா, பிரியங்கா, ஷிவானி, சுருதி, ராகவி, சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரிஷிவர்த்தினி ஆகியோருக்கு அமைச்சர் சொந்த நிதியில் லேப்டாப்கள் பரிசு வழங்கினார். கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார்.
அமைச்சர் பேசியதாவது: நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கிறது. இத்தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் இப்பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இது தமிழக கல்வித் தரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்றார். மேலுார் டி.இ.ஓ., இந்திரா, பி.ஆர்.ஓ., சாலிதளபதி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.