/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரைக்கு 36 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்திமதுரைக்கு 36 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
மதுரைக்கு 36 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
மதுரைக்கு 36 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
மதுரைக்கு 36 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
ADDED : மார் 22, 2025 04:10 PM

மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 36 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டது. இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு, பொது மேலாளர் மணி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.