ADDED : ஜூன் 01, 2025 03:53 AM
மதுரை: மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பால பணிகளை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் மேம்பால பணிகள் நடக்கின்றன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் துவக்கிய பணிகள் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கும் முன் முடிக்கும் வகையில் சுணங்கிக் கிடந்த பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. நேற்று மதுரை வந்த அமைச்சர் வேலு, பாலப்பணிகளை பார்வையிட்டு குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் சுகுமாறன் உடன் சென்றனர்.