/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செப்.23 முதல் அக். 2 வரை மீனாட்சி கோயில் நவராத்திரி விழா செப்.23 முதல் அக். 2 வரை மீனாட்சி கோயில் நவராத்திரி விழா
செப்.23 முதல் அக். 2 வரை மீனாட்சி கோயில் நவராத்திரி விழா
செப்.23 முதல் அக். 2 வரை மீனாட்சி கோயில் நவராத்திரி விழா
செப்.23 முதல் அக். 2 வரை மீனாட்சி கோயில் நவராத்திரி விழா
ADDED : செப் 13, 2025 05:30 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா செப்.,23 முதல் அக்., 2 வரை நடக்கிறது.
தினமும் மாலை 6:00 மணிக்கு மூலஸ்தானத்தில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரமாகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.
இச்சமயத்தில் மூலஸ்தான அம்மனுக்கு பக்தர்களுக்காக தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் நடத்தப்படும்.
நவராத்திரி நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சித்தருகிறார். செப்.,23 ராஜராஜேஸ்வரி, 24 - வளையல் விற்றது, 25 - ஏகபாதமூர்த்தி, 26 - ஊஞ்சல், 27 - ரசவாதம் செய்த படலம், 28 - ருத்ரபசுபதியார் அலங்காரம், 29 - தபசுகாட்சி, 30 - மகிஷாசுரமர்த்தினி, அக்.1 - சிவபூஜை அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளுகிறார்.
தினமும் காலை, மாலையில் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, பாட்டு, தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கும். விழா நாட்களில் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்ககவசம் சாத்துதல், உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா நடத்தப்பட மாட்டாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.