கருங்காலக்குடியில் மருத்துவ முகாம்
கருங்காலக்குடியில் மருத்துவ முகாம்
கருங்காலக்குடியில் மருத்துவ முகாம்
ADDED : செப் 14, 2025 04:09 AM
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் மருத்துவத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது.
இம்முகாமில் கலந்து கொண்ட நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு உயர் ரத்த அழுத்தம், எக்கோ, மின் இதய வரைபடம் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
முகாமை கலெக்டர் பிரவீன்குமார், மாநில நல வாழ்வு குழுமம் இயக்குனர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தனர்.
ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் செய்திருந்தனர்.