ADDED : அக் 23, 2025 03:33 AM
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் பூதமங்கலம், வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி பகுதியில் 278 ஏக்கரில் அரசு சார்பில் சிப்காட் அமைக்க உள்ளனர்.
நேற்று ரோடு அமைப்பதற்காக அளவிடும் பணி துவங்கியது. இப்பணியில் ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் செந்தாமரை, சிப்காட் நிர்வாக பொறியாளர் கவிதா, திட்ட அலுவலர் செல்வம் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, லோகநாதன், சண்முகசுந்தரம், போலீஸ் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


