/உள்ளூர் செய்திகள்/மதுரை/காணாமல் போன கால்வாய் தேடும் மணலுார் கண்மாய்காணாமல் போன கால்வாய் தேடும் மணலுார் கண்மாய்
காணாமல் போன கால்வாய் தேடும் மணலுார் கண்மாய்
காணாமல் போன கால்வாய் தேடும் மணலுார் கண்மாய்
காணாமல் போன கால்வாய் தேடும் மணலுார் கண்மாய்
ADDED : ஜன 05, 2024 05:12 AM
சிலைமான், : மதுரை விரகனுார் பகுதியில் மணலுார் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீர் மணலுார் கண்மாய்க்கு ஆற்றிலிருந்து நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. விரகனுாரில் 1975ல் மதகு அணை கட்டப்பட்டு அதன் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் வைகையாற்றிலிருந்து கால்வாய் மூலம் மணலுார் கண்மாயக்கு தண்ணீர் செல்லும் பாதை தடுக்கப்பட்டது.
இதில் கடைகள், வாகனங்கள் என ஆக்கிரமித்து தற்போது வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. மேலும் இப்பகுதியில் ரிங் ரோடு அமைக்கப்பட்டதால் 68 ஏக்கரில் இருந்த விரகனுார் கண்மாய் 28 ஏக்கராக சுருங்கி விட்டது. தொடர்ந்து நீர்நிலைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் சென்னை தத்தளித்தது போல் மதுரைக்கும் அந்த நிலை ஏற்படும் சூழல் உள்ளது. நீர்வளத்துறையின் கண்களுக்கு தெரியாத இவ்வகை ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை மீட்க வேண்டும்.