/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய நபர் கை, கால் முறிவு சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய நபர் கை, கால் முறிவு
சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய நபர் கை, கால் முறிவு
சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய நபர் கை, கால் முறிவு
சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய நபர் கை, கால் முறிவு
ADDED : ஜூன் 16, 2025 05:21 AM

பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை, நேற்று முன்தினம் அதிகாலை சூறையாடி, ஏட்டுவை தாக்கிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதில், போலீசிடமிருந்து தப்ப முயன்ற முக்கிய குற்றவாளிக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பேரையூர் தாலுகா வெங்கடாசலபுரம் பிரபாகரன், 29, அவரது நண்பர் அய்யனார், 20, ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
ஏட்டு பாண்டியிடம், 'என்னை ஏன் அடிக்கடி விசாரிக்க வருகிறீர்கள்' எனக்கேட்டு, அவரை தாக்கி, ஸ்டேஷன் அறைக்குள் அடைத்துவிட்டு, கம்ப்யூட்டர், வாக்கி டாக்கி, மொபைல் போனை அடித்து நொறுக்கி தப்பினர்.
டி.எஸ்.பி., சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், பீமா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியில், பிரபாகரன், அய்யனார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் பிடிக்க முற்பட்டபோது, பாலத்தில் இருந்து பிரபாகரன் குதித்ததால் வலது கை, இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரபாகரன் மீது மூன்று கொலை வழக்குகள், ஒரு கற்பழிப்பு வழக்கு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர், குண்டர் சட்டத்தில் கைதாகி, இரு மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்துள்ளார். லேப் டெக்னீஷியனான இவர், வேலையை விட்டுவிட்டு கொலை, கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்தார். அய்யனார் மீது, இரு ஆண்டுகளுக்கு முன் ஆணவக்கொலை செய்ததாக வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.