/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொழில் பார்ட்னரை கொன்றவர் கூலிப்படையுடன் சுற்றிவளைப்பு தொழில் பார்ட்னரை கொன்றவர் கூலிப்படையுடன் சுற்றிவளைப்பு
தொழில் பார்ட்னரை கொன்றவர் கூலிப்படையுடன் சுற்றிவளைப்பு
தொழில் பார்ட்னரை கொன்றவர் கூலிப்படையுடன் சுற்றிவளைப்பு
தொழில் பார்ட்னரை கொன்றவர் கூலிப்படையுடன் சுற்றிவளைப்பு
ADDED : செப் 16, 2025 12:26 AM

மதுரை: மதுரையில் 'பார்சல் சர்வீஸ்' தொழிலை தனி ஒருவனாக நடத்த திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி பார்ட்னரை கொலை செய்தவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, பார்க் டவுனைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 52. முனிச் சாலையில் பார்ட்னர் கல்லாணை, 50, என்பவருடன் பார்சல் சர்வீஸ் தொழில் செய்தார். செப்., 12 இரவு, வீட்டிற்கு டூ - வீலரில் சென்றபோது, வீட்டருகே மூன்று பேர் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில், மதுரை சந்தைப்பேட்டை பார்ட்னர் கல்லாணை, கூலிப்படையாகச் செயல்பட்ட ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம், 43, விக்னேஸ்வரன், 28, ரவிவர்மன், 57, முரளி, 50, ஜெயராஜ், 41, வெங்கடேஸ்வரன், 41, ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
ராஜ்குமாரும், கல்லாணையும் டிராவல் பார்சல் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். கல்லாணை லோடுமேன். ராஜ்குமார் அலுவலக ஊழியர். இருவரும் இணைந்து முனிச் சாலையில் ஆர்.கே., என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை, தலா 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டினர்.
ஆறு மாதங்களுக்கு முன், தன் மகனையும் பார்ட்னராக சேர்க்க கல்லாணை வற்புறுத்தியதில், ராஜ்குமார் மறுத்துள்ளார். இதில், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.
தனி ஆளாக இத்தொழிலை நடத்த நினைத்த கல்லாணை, ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். அவர் ஏற்பாட்டில் ராஜ்குமார் கொல்லப்பட்டுள்ளார். தற்போது, ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.