மாநில ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்
மாநில ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்
மாநில ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்
ADDED : மே 30, 2025 03:52 AM

மதுரை:வேலுாரில் நடந்த சப் ஜூனியர் ஆண்கள் மாநில சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் மதுரை மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி முடிவுகள்
லீக் போட்டியில் மதுரை அணி 15 - 0 கோல் கணக்கில் கன்னியாகுமரி அணியையும் 3 - 0 கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் 8 - 2 கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் 6 - 2 கோல்கணக்கில் கிருஷ்ணகிரி அணியையும், அரையிறுதி போட்டியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் துாத்துக்குடி அணியையும் வென்றது.இறுதிப்போட்டியில் மதுரை அணி 3 - 0 கோல் கணக்கில்ராமநாதபுரம் அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. ராமநாதபுரம் 2ம் இடம், திருநெல்வேலி 3ம் இடம், துாத்துக்குடி 4ம் இடம் பெற்றன.
வெற்றி பெற்றவர்களை கலெக்டர் சங்கீதா, மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன், செயலர் ரமேஷ், பொருளாளர் ஆனந்த் சாம்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, முதுநிலை பயிற்சியாளர் பாலா பாராட்டினர்.
தமிழகத்தில் நடக்க உள்ள தேசிய சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்கானதமிழக அணிக்கான பயிற்சி முகாம், தமிழக அணித் தேர்வு மதுரையில் நடக்க உள்ளது.