/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகங்கள் இடமாற்றம் மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகங்கள் இடமாற்றம்
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகங்கள் இடமாற்றம்
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகங்கள் இடமாற்றம்
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகங்கள் இடமாற்றம்
ADDED : ஜூன் 26, 2025 01:20 AM
மதுரை: மதுரை கிழக்கு, மேற்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லுார் ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகங்கள் கட்ட ரூ.5.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கிழக்கு, மேற்கு அலுவலகங்கள் சொக்கிக்குளம் பகுதியில் ஒரே வளாகத்தில் இயங்கி வந்தன.
தற்போது இங்கு கட்டடம் இடிக்கப்படுவதால் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மதுரை கிழக்கு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்குக்கு (பென்னிகுக் அரங்கம்) இடமாற்றப்பட்டுள்ளது. மதுரை மேற்கு அலுவலகம் செட்டிக்குளத்தில் ஒரு திருமண மண்டபத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது. இதேபோல வாடிப்பட்டி, அலங்காநல்லுார் அலுவலகங்களும் இடம் மாறவுள்ளன.