Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடம் கமிஷனர் சித்ரா தகவல்

சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடம் கமிஷனர் சித்ரா தகவல்

சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடம் கமிஷனர் சித்ரா தகவல்

சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடம் கமிஷனர் சித்ரா தகவல்

ADDED : மார் 26, 2025 03:58 AM


Google News
மதுரை : தமிழகத்தில் அதிக சொத்து வரி வசூலித்த மாநகராட்சிகள் பட்டியலில் மதுரை 3வது இடத்தையும், வரி வசூல் இலக்கில் கூடுதலாக வசூலித்து முதலிடத்தையும் பெற்றுள்ளது என கமிஷனர் சித்ரா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஓசூர், சேலம் மாநகராட்சிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. வரி இலக்கில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.254 கோடியை வசூல் செய்ததோடு கூடுதலாக ரூ. 4.12 கோடி வசூல் செய்து முதலிடம் பெற்றுள்ளது. மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக 112 வழக்குகள் உள்ளன. இவற்றில் சொத்து வரி நிர்ணயம் செய்ததில் உயர் நீதிமன்றத்தில் 9, மாவட்ட நீதிமன்றத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 11 வழக்குகள் மீது இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது. இவற்றில் 7 வழக்குகளில் 70 சதவீதத்திற்கும் மேலான வரி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. 22 வழக்குகளில் மாநகராட்சி மேல் முறையீடு சென்றுள்ளது. இந்த வழக்குகளும் விரைவில் முடிக்கப்பட்டு நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய், பூனைக்கு வரி


வரும் ஆண்டிலும் வரிவசூலில் மதுரை முதலிடத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை நகரில் ஏப்ரல் முதல் ஆடு, மாடு, நாய், பூனை, குதிரைக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us